Cinema

110 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து சாதனைப் படைத்த ஜவான்!

அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ள ‘ஜவான்’ படத்தின் பிரிவ்யூ வெளியான 24 மணி நேரத்தில் 110 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது.

வநந‘பிகில்’ படத்துக்குப் பிறகு அட்லீ இயக்கி வரும் ‘ஜவான்’ படத்தில் ஷாருக்கான் நடித்து வருகிறார். இதில் நயன்தாரா, விஜய் சேதுபதி இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். மேலும், தீபிகா படுகோன், சஞ்சய் தத் ஆகியோர் கவுரவ தோற்றத்தில் நடித்துள்ளனர். அனிருத் இசை அமைக்கிறார். இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகும் இப்படம் வரும் செப்டம்பர் 7-ம் தேதி வெளியாகிறது. இப்படத்தின் ‘பிரிவ்யூ’ கடந்த ஜூலை 10 அன்று வெளியானது. இதில் முதல்முறையாக ஷாருக்கான் மொட்டைத் தலையுடன் தோன்றியிருந்தார்.

இந்த நிலையில், வெளியான 24 மணி நேரத்தில் 110 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்று ‘ஜவான்’ பிரிவ்யூ சாதனை படைத்துள்ளது. இதற்கு முன்பு ‘ஆதிபுருஷ்’ ட்ரெய்லர் 24 மணி நேரத்தில் 109 மில்லியன் பார்வைகளை பெற்றிருந்தது. தற்போது அதனை பின்னுக்குத் தள்ளியுள்ளது ‘ஜவான்’ பிரிவ்யூ.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading