Local

மரணதண்டனைக்கு எதிராக ஒரே நாளில் 12 மனுக்கள் உயர்நீதிமன்றில் தாக்கல்!

மரணதண்டனையை மீண்டும் நடைமுறைப்படுத்துவதற்கு எதிராக, உயர் நீதிமன்றத்தில் இன்று (12) ஒரே நாளில் 12 அடிப்படை உரிமை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

அடிப்படை உரிமை மீறல் மனுக்களைத் தாக்கல் செய்தவர்களில் கல்வி அமைச்சின் முன்னாள் செயலர் கலாநிதி தாரா டி மெல்லும் அடங்குகின்றார்.

மரணதண்டனை நடைமுறைப்படுத்துவது, அரசிமைப்பில் நிறுவப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை மீறுவதாக இருக்கும் என்று மனுதாரர்கள் வாதிட்டுள்ளனர்.

நான்கு போதைப்பொருள் குற்றவாளிகளுக்கு மரணதண்டனை நிறைவேற்றும் ஆணையில் ஜனாதிபதி கையெழுத்திட்டதை அடுத்து, மரணதண்டனையைத் தடுத்து நிறுத்துமாறு கோரி, மேன்முறையீட்டு நீதிமன்றில் ஏற்கனவே அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

அந்த மனு மீது நாளை விசாரணை இடம்பெறவுள்ள நிலையில் உயர்நீதிமன்றில் 12 அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading