Lead NewsLocal

குருணாகல் வைத்தியருக்கு எதிராக 129 முறைப்பாடுகள்!

சிசேரியன் சத்திர சிகிச்சை என்ற போர்வையில் சிங்களப் பெண்களுக்குக் கருத்தடை சத்திர சிகிச்சை செய்தார் எனக் குற்றம் சாட்டப்பட்ட பின்னர், கைதுசெய்யப்பட்டு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் விசாரணைக்குட்படுத்தப்பட்டு வரும் குருணாகல் வைத்தியசாலையின் மகப்பேற்று வைத்தியர் சேகு சியாப்டீன் மொஹமட் ஷாபிக்கு எதிராக இதுவரை 129 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

இந்தத் தகவலை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் வெளியிட்டுள்ளது.

நேற்று மட்டும் 67 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. தம்புள்ளை வைத்தியசாலைக்கு 10 முறைப்பாடுகளும் குருணாகல் வைத்தியசாலைக்கு 57 முறைப்பாடுகளும் நேற்றுக் கிடைத்துள்ளன எனச் சொல்லப்படுகின்றது.

இதன்படி குறித்த வைத்தியருக்கு எதிராக இதுவரை 129 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

அரச மருத்துவமனை நிர்வாகங்கள் சுகாதார அமைச்சின் அனுமதியுடன் மட்டுமே அறிக்கைகளை வெளியிடலாம் என்று முன்னதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், குருணாகல் வைத்தியர் தொடர்பான இந்தத் தகவலை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் வெளியிட்டுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading