Local

15 வயது சிறுவனை துஷ்பிரயோகம் செய்த 27 வயதுடைய ஆசிரியை கைது!

மாத்தறை – வெலிகமையில்
15 வயது சிறுவனை துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் பிரத்தியேக வகுப்பு ஆசிரியயை( 27) சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட சிறுவனின் பெற்றோர் அளித்த புகாரைத் தொடர்ந்து இந்த கைது செய்யப்பட்டுள்ளது.

இந்த சிறுவன் ஒக்டோபர் 06 ஆம் திகதி ஆசிரியரின் இல்லத்தில் வகுப்புகளில் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.

வகுப்பைத் தொடர்ந்து சிறுவன் வீடு திரும்பாததால், சிறுவனின் தாய் ஆசிரியரின் இல்லத்திற்கு வந்து அவர் இருக்கும் இடத்தை விசாரித்துள்ளார்.

குறித்த சிறுவனும் ஆசிரியையும் வீட்டில் இல்லை என்று ஆசிரியையின் தாய் சிறுவனின் பெற்றோருக்கு கூறியுள்ளார்.

காணாமல் போன சிறுவன் குறித்து அந்த தாய் வெலிகாமா பொலீசில் முறைப்பாடு அளித்திருந்தார்.

விசாரணையில் ஆசிரியை சிறுவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு அழைத்துச் சென்றிருக்கின்றார்.

அதன்பின்னர் ஆசிரியையும் சிறுவனும் திங்கள்கிழமை (12) காவல்துறையினரால் வரவழைக்கப்பட்ட பின்னர் பொலிஸாருக்கு அறிக்கை அளித்தனர்.

அந்த பெண் தன்னை கொழும்பு மற்றும் கண்டியில் உள்ள ஹோட்டல்களுக்கு அழைத்துச் சென்றதாக அந்த சிறுவன் பொலீசில் ஒப்புக்கொண்டான்.

சிறுவனின் வாக்குமூலம் அடிப்படையில் ஆசிரியையை கைது செய்துள்ளனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading