Local

தற்கொலைக் குண்டுதாரிகளின் 18 வாகனங்களுக்கு வலைவீச்சு! – இதுவரை 6 வாகனங்கள் சிக்கின

உயிர்த்த ஞாயிறு தினமன்று நாட்டின் தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தாக்குதல்களுடன் தொடர்புடைய தற்கொலைதாரிகள் பயன்படுத்திய வாகனங்கள் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்கொலைதாரிகள் சுமார் 18 வாகனங்களைப் பயன்படுத்தியுள்ளனர் என்று பாதுகாப்புத் தரப்பினர் நடத்திய விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

அதனடிப்படையில் 6 வான்கள், 9 மோட்டார் சைக்கிள்கள், 2 கார்கள் மற்றும் ஒரு கெப் வாகனம் என்பன பயன்படுத்தப்பட்டுள்ளன.

தற்கொலைதாரிகள் மற்றும் அவர்களது மனைவியர், உறவினர்கள் ஆகியோரின் பெயர்களில் இந்த வாகனங்கள் பதிவு செய்யப்பட்டிருந்தனர் என்று ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

மேலும் குறித்த 18 வாகனங்களில் 6 வாகனங்கள் பாதுகாப்புத் தரப்பினரால் கைப்பற்றப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading