World

21 ஆண்டுகள் இறந்த மனைவியின் சடலத்துடன் வாழ்ந்த கணவர்!

மனைவியின் மீதுள்ள தீரா காதலால் 21 ஆண்டுகள் இறந்த சடலத்துடன் வாழ்ந்து 72 வயது முதியவர் ஒருவர் வாழ்ந்து வந்துள்ளார்.

தாய்லாந்து இராணுவத்தில் மருத்துவராகப் பணியாற்றிக் கொண்டிருந்தபோது, அங்கு வேலைபார்த்துக்கொண்டிருந்த ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

இந்நிலையில் இவரது மனைவி 21 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்துள்ளார். ஆனால் மனைவியின் மீதுள்ள தீரா காதலால் அவருக்கு இறுதி சடங்கு செய்யாமல், அவரை வீட்டிலேயே வைத்துள்ளார்.

இதை ஏற்றுக்கொள்ள முடியாத அவரது இரண்டு மகன்களும் வீட்டைவிட்டு வெளியேறினர். பின்னர், மனைவிக்கு முறையான இறுதிச்சடங்கு நடக்குமா என்ற அச்சம் எழுந்த பிறகு, தாம் உயிருடன் இருக்கும் போதே மனைவிக்குப் பிரியாவிடை சார்ன் கொடுக்க முடிவெடுத்தார். இதனால் மனைவிக்கு இறுதிச் சடங்கு கொடுக்க எண்ணி அதனை செய்தார்.

மனைவியின் உடல் தகனச்சாலைக்கு எடுத்து செல்லப்பட்டபோது, சார்ன் கதறிக் கதறி அழுதாக கூறப்படுகின்றது. அதன்பின்னர் அவர், மனைவியின் சாம்பலை ஒரு வெள்ளைத் துணியில் சுற்றி அதை வீட்டுக்கு எடுத்துச்சென்றார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading