Local

21 நாட்களேயான சிசுவுக்கு கொரோனா தொற்று!

தங்காலை, குடாவெல்ல பகுதியில் 25 வயதான ஒரு பெண் கொவிட் – 19 தொற்றுக்கு உள்ளாகியுள்ளார்.

அவரது 21 நாட்கள் வயதுடைய குழந்தையும் கொவிட் 19 தொற்றுக்குள்ளான நிலையில் இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனனர்.

குறித்த பெண் கண்டியில் இருந்து கிரிபத்கொடை பகுதிக்கு வந்து பேலியகொட மீன் விற்பனை நிலையத்தில் தொழில் புரியும் தமது உறவினருடன் ஒரு வாரக்காலம் தங்கியிருந்து பின்னர் குடாவெல பகுதியில் உள்ள தனது வீட்டுக்கு திரும்பி சென்றுள்ளார்.

இந்த நிலையில் குறித்த பெண்ணுக்கு மேற்கொள்ளப்பட்ட பீ.சீ.ஆர் பரிசோதனையில் அவர் தொற்றுக்கு உள்ளானமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading