World

27 ஆண்டுகள் கோமாவில் இருந்த தாயை மீட்ட மகன்!

ஐக்கிய அரபு அமீரகத்தில், 1991ஆம் ஆண்டு நடைபெற்ற விபத்து ஒன்றில் மோசமாக காயமடைந்து, 27 வருடங்கள் கோமாவில் இருந்து மீண்டுள்ளார் பெண் ஒருவர்.

முனிரா அப்துல்லா என்ற அந்த பெண், தனது மகனை பள்ளியில் இருந்து அழைத்து வந்துகொண்டிருந்த சமயத்தில், அவர் பயணம் செய்த கார் பேருந்து ஒன்றின் மீது மோதியதால் அவர் மூளையில் தீவிரமான காயங்கள் ஏற்பட்டன.

முனிராவுக்கு அப்போது 32 வயது, அவரின் மகன் உமருக்கு நான்கு வயது.

விபத்து நடந்த சமயத்தில், முனிராவின் கணவரின் தம்பி அந்த காரை ஓட்டியுள்ளார். முனிராவும் அவரது மகனும் பின் இருக்கையில் அமர்ந்திருந்தனர்.

தனது மகனை முனிரா அரவணைத்து கொண்டதால் அவர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார்.

முனிராவுக்கு 27 வருடங்கள் கழித்து கடந்த வருடம் மருத்துவமனையில் நினைவு வந்துள்ளது.

செய்தித்தாள் நேர்காணல் ஒன்றில் அந்த விபத்து குறித்தும், தனது தாயின் சிகிச்சை குறித்தும் இந்த செய்தியினை பகிர்ந்துள்ளார் உமர்.

“ஒருநாள் நிச்சயமாக அவர் கண் விழிப்பார் என்று நான் நம்பினேன். எனது நம்பிக்கையை நான் இழக்கவில்லை,” என்று உமர் தெரிவித்துள்ளார்.

“உங்களின் அன்பிற்குரியவர்களுக்கு இம்மாதிரியான நிலை ஏற்பட்டால் உங்களின் நம்பிக்கையை கைவிடாதீர்கள் என்பதை தெரிவிக்கவே இப்போது நான் இந்த செய்தியை பகிர்ந்துள்ளேன்.” என்று மேலும் தெரிவிக்கிறார் ஒமர்.

“எனது தாயும் நானும் பின் இருக்கையில் அமர்ந்திருந்தோம் பேருந்து எங்கள் மீது மோத வரும் அந்த நிமிடத்தில் என் தாய் என்னை அரவணைத்து கொண்டார்.” என்று அந்த நிமிடங்களை நினைவு கூறுகிறார் உமர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading