Local

30 நாட்களில் மூன்று அமைச்சுப் பதவிகளை ஏற்ற அமைச்சர்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க 30 நாட்களில் மூன்று அமைச்சுக்களுக்கான அமைச்சராக பதவியேற்றுள்ளார்.

கடந்த ஏப்ரல் 17 ஆம் திகதி சுற்றுலாத் துறை அமைச்சராக மீண்டும் பதவியேற்ற பிரசன்ன ரணதுங்க, ஏப்ரல் 18 ஆம் திகதி பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சராக பதவியேற்றார்.

இதன் பின்னர்  கடந்த 9 ஆம் திகதி பிரதமர் பதவியை மகிந்த ராஜபக்ச ராஜினாமா செய்ததை அடுத்து, முழு அமைச்சரவையும் பதவி இழந்தது.

இந்த நிலையில், ரணில் விக்ரமசிங்க புதிய பிரதமராக நியமிக்கப்பட்டதுடன் இன்று நான்கு புதிய அமைச்சர்கள் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்துக்கொண்டனர்.

பிரசன்ன ரணதுங்க, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சராக இன்று பதவிப் பிரமாணம் செய்துக்கொண்டார்.

பிரசன்ன ரணதுங்கவை தவிர பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் வெளிவிவகார அமைச்சராகவும் தினேஷ் குணவர்தன பொது நிர்வாகம்,உள்நாட்டு விவகாரம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் அமைச்சராகவும் காஞ்சன விஜேசேகர மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சராகவும் இன்று சத்தியப் பிரமாணம் செய்துக்கொண்டனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading