Local

33 ஆவது இடத்தில் பெசில் ராஜபக்ச!

முன்னாள் நிதியமைச்சர் பெசில் ராஜபக்ஷ நாடாளுமன்றில் ஆளுங்கட்சியின் 33ஆவது ஆசனத்தில் இன்று அமர்வதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

புதிய அமைச்சரவை நியமனத்திற்கு பின்னர் பெசில் ராஜபக்ஷ இன்று (04) முதன்முறையாக நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்துகொண்டார்.

அதற்கமைய, நிதியமைச்சராக இருந்தபோது ஆளுங்கட்சியின் பக்கமாக 9 இடத்தில் அமர்ந்திருந்த நிலையில், இன்று அவர் 24 ஆசனங்கள் பின்சென்று 33ஆவது ஆசனத்தில் அமர்ந்து சபை நடவடிக்கைகளில் கலந்துகொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading