EastLocal

சாய்ந்தமருதில் 6 தற்கொலைக் குண்டுதாரிகள்! மக்கள் பள்ளிவாசல்களில் தஞ்சம்!!

சாய்ந்தமருதுவில் நேற்று மாலை இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு மற்றும் வெடிப்புச் சம்பவங்களில் 15 சடலங்களை கண்டெடுக்கப்பட்டுள்ளன. அதில் 6 சடலங்கள் தற்கொலைக் குண்டுதாரிகளின் உடல்களாக இருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

தெமட்டகொடவில் நடந்தது போல, பாதுகாப்புப் பிரிவினர் இவர்களது இடத்தினுள் நுழைய முயன்றபோது, குண்டை வெடிக்க வைத்து தங்கள் குடும்பத்தினரோடு உயிரிழந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றது.

அதேவேளை, வெடிப்புச் சம்பவம் மற்றும் துப்பாக்கிச்சூடு இடம்பெற்ற இடத்துக்கு அருகே வசித்து வந்த மக்கள், தங்களது வீடுகளை விட்டு வெளியேறி அருகில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில் தஞ்சம் அடைந்துள்ளனர். தற்போது அப்பள்ளியில் நூற்றுக்கணக்கான மக்கள் கூடியுள்ளனர்.

பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதுடன், குறித்த பகுதியில் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading