Local

சஹ்ரான் ஷங்ரி – லாவில் உயிரிழந்தமை உறுதியே!

ஈஸ்டர் தினத்தன்று இலங்கையில் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களின் சூத்திரதாரி எனக் கருதப்பட்ட சஹ்ரான் ஹாசீம் என்ற மெளலவி இறந்துவிட்டார் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

ஜனாதிபதி மாளிகையில் நேற்றுக் காலை இடம்பெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பில் அவர் இவ்விடயத்தைக் குறிப்பிட்டார்.

ஷங்ரி – லா நட்சத்திர விடுதித் தாக்குதலில் சஹ்ரான் உயிரிழந்துவிட்டார் என ஜனாதிபதி குறிப்பிட்டார்.

எனினும், அதனை உறுதிப்படுத்துவதற்கு மரபணுப் பரிசோதனை செய்யப்படவுள்ளது என இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டிருந்த புலனாய்வுத்துறை அதிகாரி தெரிவித்தார்.

அத்தோடு, 2017ஆம் ஆண்டு முதல் சஹ்ரான் இலங்கை அரசால் தேடப்பட்டு வந்துள்ளார். அதன் பின்னர் இந்தியாவுக்குத் தப்பிச் சென்ற அவர், அங்கிருந்து ஐ.எஸ்.ஐ.எஸ்ஸுடன் தொடர்பைப் பேணி வந்துள்ளார். அதனைத் தொடர்ந்து இலங்கையில் தாக்குதல் நடத்தியுள்ளார் எனப் புலனாய்வுத்துறை அதிகாரி மேலும் கூறினார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading