World

24 மணி நேரத்தில் 60 தலீபான்கள் கொன்று குவிப்பு !

ஆப்கான் ராணுவம் நடத்திய அதிரடி தாக்குதலில் 24 மணி நேரத்தில் 60 தலீபான் பயங்கரவாதிகள் கொன்று குவிக்கப்பட்டனர்.

ஆப்கானிஸ்தானில் ஆதிக்கம் செலுத்தி வரும் தலீபான் பயங்கரவாதிகளை ஒடுக்க அமெரிக்க படையின் உதவியோடு ஆப்கான் இராணுவம் கடுமையாக போராடி வருகிறது.

இந்த நிலையில் லாகர், வார்டாக், பாக்டிகாக் ஆகிய மாகாணங்களில் தலீபான் பயங்கரவாதிகளின் நிலைகளை குறிவைத்து வான்வழியாகவும், தரை வழியாகவும் ஆப்கான் இராணுவத்தினர் அதிரடி தாக்குதலில் ஈடுபட்டனர்.

போர் விமானங்கள் இடைவிடாது குண்டு மழை பொழிந்ததில் பயங்கரவாதிகளின் பதுங்கு குழிகள் நிர்மூலமாக்கப்பட்டன. அத்துடன் தலீபான்களுக்கான ரேடியோ கோபுரம் மற்றும் அவர்களின் ஆயுதகிடங்குகளும் அழிக்கப்பட்டன.

இந்த அதிரடி தாக்குதலில் 24 மணி நேரத்தில் 60 பயங்கரவாதிகள் கொன்று குவிக்கப்பட்டனர். இந்த தகவலை ஆப்கான் இராணுவம் தெரிவித்தது.

 

 

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading