Local

15 வீதமான பாடசாலை மாணவர்கள் குறுந்தூர பார்வை குறைபாட்டால் பாதிப்பு

பாடசாலை மாணவர்களில் 15 சதவீதம் பேர் குறும்பார்வை குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குழந்தைகளுக்கு ஏற்படும் கண் நோய்கள் குறித்து பெற்றோர்கள், பெரியவர்கள், பாடசாலை ஆசிரியர்கள் கவனமாக இருக்க வேண்டும் என லேடி ரிஜ்வே குழந்தைகள் வைத்தியசாலையின் கண் நோய் சிறப்பு வைத்தியர் ஹிரண்யா குணசேகர தெரிவித்துள்ளார்.

உலக கண் பார்வை தினத்தை முன்னிட்டு தேசிய கண் வைத்தியசாலையில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்ட போதேவைத்தியர் ஹிரண்ய குணசேகர மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் தொடர்ந்து பருத்து வெளியிட்ட அவர்,

எந்தவொரு குழந்தைக்கும் ஏதேனும் கண்நோய் இருந்தால், உடனடியாக சிகிச்சைக்கு பரிந்துரைக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

குழந்தைகள் மிக அருகில் டிவி பார்ப்பது, புத்தகங்களை கண்ணுக்கு அருகில் படிப்பது, தலைவலி, அடிக்கடி கண் சிமிட்டுவது, அசாதாரணமாக தலை சுற்றுவது போன்ற அறிகுறிகளால் பாதிக்கப்பட்டால், அவர்களுக்கு தேவையான சிகிச்சைக்கு பரிந்துரைக்க வேண்டும்.

நீரிழிவு நோயால் ஏற்படும் பலவீனம் அல்லது கிளகோமாவின் தாக்கம் காரணமாக, தொலைநோக்கு நிலை ஏற்படலாம் என்று கூறப்படுகிறது.

தொலைநோக்கு நோயை ஆஸ்டிஜிமாடிசம் என்று அழைக்கிறார்கள்,

கண் மருத்துவர்கள் ஆஸ்டிஜிமாடிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு பிரெய்லியை அறிமுகப்படுத்தக்கூடாது என்று கூறினார்.

உலகில் சுமார் 128 மில்லியன் மக்கள் இந்நோயால் பாதிக்கப்படுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading