9 குழந்தைகளை பெற்ற சீன பெண்ணின் விபரீத ஆசை!
சீனாவை சேர்ந்த தம்பதிக்கு 9 குழந்தைகள் பிறந்துள்ள நிலையில் மேலும் அவர்கள் குழந்தைகளை பெற்றுக்கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளனர்.
சீனாவை சேர்ந்தவர் தியான். 2008 ஆம் ஆண்டு தொழிலதிபரான ஜவோவை சந்தித்து 2010 இல் திருமணம் செய்து கொண்டார். இதனை தொடர்ந்து அவருக்கு இரட்டை ஆண் குழந்தைகள் உள்பட தற்போது வரை 9 குழந்தைகள் பிறந்துள்ளது.
உடல் பலவீனம் காரணமாக குழந்தை பெறுவதை தள்ளி வைத்துள்ள நிலையில் அந்த தம்பதி மேலும் 4 குழந்தைகளை பெற்றெடுக்க விரும்புகிறார்கள்.
இதுகுறித்து தியான் தெரிவிக்கையில்,
என் குழந்தைகளில் 2 பேர் ஒரே ராசிக்காரர்கள், மீதமுள்ள 7 பேர் வெவ்வேறு ராசிகளை கொண்டவர்கள். எனவே சீன சாஸ்திரத்தின்படி 12 ராசிகளை குறிக்கும் வகையில் மேலும் 4 குழந்தைகளை பெற்றுக்கொள்வேன் என்றார்.
மக்கள்தொகை அதிகம் கொண்ட சீனாவில் தம்பதியின் இந்த வினோத ஆசை தொடர்பான தகவல்கள் இணையத்தில் வெளியாகி வலைத்தள வாசிகளிடையே பேசுப்பொருளாகி உள்ளது.

You must be logged in to post a comment.