World

பங்களாதேஷில் தீ விபத்து! 70 பேர் பலி!!

பங்களாதேஷில் ஏற்பட்ட தீவிபத்தில் எழுபதுக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.

தலைநகர் டாக்காவிலுள்ள பல மாடி கட்டடத்தில் புதன்கிழமை மாலை இந்த தீ விபத்து ஏற்பட்டது. இரசாயன பொருட்கள் சேமித்து வைத்திருந்த கிடங்கு இந்த கட்டடத்தில்தான் இருந்தது.

இந்த தீ விரைவாக பக்கத்து கட்டடங்களுக்கும் பரவியதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்த தீ விபத்தில் 70 பேர் வரை பலியானதாக வங்கதேசத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.

தீயணைப்பு துறை தலைவர் அலி அஹமத், “சிலிண்டரில் ஏற்பட்ட கசிவிலிருந்தே இந்த தீ உருவாகி உள்ளது. இந்த கட்டடத்தில் இரசாயன குடோனும் இருந்ததால் தீ வேகமாக பரவி உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

தீ விபத்தினால் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மக்களும் தப்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

பழமையான செளக்பஜாரில்தான் இந்த தீ விபத்து ஏற்பட்டது இங்கு தெருக்கள் குறுகலாக இருக்கும். வீடுகளும் நெருக்கமாக இருக்கும்.

கட்டட விதிமுறைகளை முறையாக பின்பற்றாதது வங்கதேசத்தில் பெரும் பிரச்சனையாக உள்ளது.

டாக்காவிலுள்ள ராணா பிளாசாவில் 2013ஆம் ஆண்டு ஏற்பட்ட தீவிபத்தில் 1,100க்கும் மேற்பட்டவர்கள் பலியானர்கள்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading