Local

பெருந்தோட்டக் கம்பனிகள் இலாபத்தை மூடிமறைக்கின்றன!

பெருந்தோட்டத்தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்கமுடியும். எனினும், திட்டமிட்ட அடிப்படையிலேயே கம்பனிகள் இலாபத்தை மூடிமறைத்து வருகின்றன என்று சபை முதல்வரும், அரச தொழில் முயற்சி அமைச்சருமான லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்தார்.

கம்பளை நகரசபையில் இன்று ( 27) நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு, தோட்டத்தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு கோரிக்கை தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

‘ அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்குமாறு வலியுறுத்தி தோட்டத் தொழிலாளர்கள் போராடிவருகின்றனர். எனினும், இத்தொகையை வழங்குவதற்கு கம்பனிகள் இன்னும் இணக்கம் வெளியிடவில்லை.

பெருந்தோட்டக் கம்பனிகள் இலாபம் உடைக்கின்றன. இருந்தாலும் அதை மூடிமறைக்கின்றன. எனவே,  கம்பனிகள் மனம் வைத்தால், தோட்டத் தொழிலாளர்களுக்க ஆயிரம் ரூபா வழங்கமுடியும்.

இலாபம் இல்லை, தோட்ட நிர்வாகமானது நட்டத்திலேயே செயற்படுகின்றன என்றால் பெருந்தோட்டக் கம்பனிகளை அரசாங்கத்திடம் ஒப்படைக்குமாறு சவால் விடுக்கின்றேன். அரசாங்கமானது தோட்டத்தொழிலாளர்களின் பக்கமே நிற்கின்றது.” என்றும் அமைச்சர் கூறினார்.

 

 

 

 

 

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading