Local

தமிழர்களே இனி இறங்கிவர வேண்டும்! முன்னாள் தளபதி தெரிவிப்பு

” நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதில் சிங்கள மக்கள் தமது கடமையை சரிவர நிறைவேற்றியுள்ளனர். எனவே, தமிழர் தரப்பிலிருந்துதான் கூடுதல் பங்களிப்பு அவசியமாகவுள்ளது.”  என்று முன்னாள் விமானப்படைத் தளபதி எயார் சீப் மார்ஷல் ரொஷான் குணதிலக்க தெரிவித்தார்.

கொழும்பில் இன்று ( 20 ) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

”  போர்முடிவடைந்தப்பின்னர், புலி உறுப்பினர்கள் புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகமயப்படுத்தப்பட்டனர். குறித்த திட்டம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது.  இவ்வாறு புலி உறுப்பினர்கள் மன்னிக்கப்பட்டு,  விடுவிக்கப்பட்டுள்ள, இத்தகைய செயற்பாடுகளை தமிழர் தரப்பு வரவேற்கவேண்டும்.

நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்கு சிங்கள மக்கள் என்ற வகையில் எமது கடமையை சரிவரசெய்துள்ளோம். ஆகவே, நல்லிணக்கம் என்ற இலக்கு வெற்றியடையவேண்டுமென்றால், தமிழர் தரப்பு கூடுதல் பங்களிப்பை வழங்க முன்வரவேண்டும்.

போர்காலத்தில் எனது தம்பி , தீவிரவாதிகளால் கொல்லப்பட்டார். அதற்காக நான் தமிழ் மக்களுடன் முரண்படவில்லை. எனக்கு நிறைய தமிழ் நண்பர்கள் இருக்கின்றனர்.

படையினருக்கு எதிராக தாக்குதல் தொடுத்த புலிகள் மன்னிக்கப்பட்டனர். எனவே, தமிழர் தரப்பிலிருந்து இதைவிடவும் கூடுதல் பங்களிப்பை எதிர்பார்க்கின்றோம்.” என்றார்.

 

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading