சர்வகட்சி கூட்டத்துக்கு ஜனாதிபதி அழைப்பு! பாதுகாப்பு செயலர், பொலிஸ்மா அதிபரை பதவி விலகுமாறும் பணிப்பு!!
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் சர்வக்கட்சி குழுக் கூட்டம் நடைபெறவுள்ளது என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் தற்போது நடைபெற்றுவரும் விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்படி தகவலை வெளியிட்டார்.
”நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமையைக்கருத்திற்கொண்டு, சர்வக்கட்சி கூட்டத்துக்கு ஜனாதிபத அழைப்பு விடுத்துள்ளார். அதில் பங்கேற்று நாடு குறித்து சிந்தித்து ஆலோசனைகளை முன்வைக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
இனம் மற்றும் மதங்களின் பெயர்களின் கட்சிகள், அமைப்புகள் இருப்பதால்தான் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இவை குறித்தும் கவனம் செலுத்தப்படவேண்டும்.” என்றும் கூறினார் தயாசிறி.
அதேவேளை, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், பொலிஸ்மா அதிபர் ஆகியோரை பதவி விலகுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பணிப்புரை விடுத்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
