Local

அங்கொட லொக்க, கஞ்சிப்பான இம்ரான், சூட்டா, சுத்தா குறித்தும் டுபாயில் தீவிர விசாரணை!

டுபாயில் கைது செய்யப்பட்ட மாக்கந்துர மதுஷ் மற்றும் அவரது சகாக்களை இலங்கைக்கு நாடுகடத்த அந்நாட்டு அரசு ஆலோசித்து வருவதாக உயர்மட்ட பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.

கைது செய்யப்பட்டவர்களில் அஹூன்கல்ல புத்தி, அமில ஆகியோர் மிக முக்கிய புள்ளிகளென கூறுப்படுகின்றது.

இன்னுமொரு முக்கிய புள்ளியான மாளிகாவத்தையின் கஞ்சிப்பான இம்ரான் மற்றும் அவரது சகாக்கள் பாஸ்,பைசர்,ஷியாம் , அஜ்மி ஆகியோரும் சிக்கியவர்களில் உள்ளடங்குகின்றனர்.

டுபாய் பிறந்த நாள் நிகழ்வில் கலந்து கொண்டு சிகரெட் பிடிப்பதற்காக ஹோட்டலை விட்டு வெளியே வந்து மீண்டும்

ஹோட்டலுக்குள் செல்ல முயன்றபோது பொலிஸாரை கண்டு தப்பியோடிய அங்கொட லொக்கா மற்றும்

அவரது இரு கூட்டாளிகளை சி சி ரீ வி உதவியுடன் கைது செய்ய டுபாய் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அங்கொட லொக்காவின் முக்கிய சகாக்கள் இருவர் பொலிஸாரிடம் சிக்கியிருப்பதால் அவர் தங்கியிருக்கும் பகுதி மற்றும் அவரது நட்பு வட்டாரங்கள் குறித்து தேட ஆரம்பித்துள்ள டுபாய் பொலிஸ், பெரும்பாலும் அவர் கைதுசெய்யப்படுவார் என்றே நம்பிக்கை வெளியிட்டுள்ளன.

டுபாயில் மதுஸுக்கு சொந்தமான சொத்துக்களை தேட ஆரம்பித்துள்ள பொலிஸ் அவற்றுக்குரிய ஆவணங்களை மீட்டுள்ளது.

இலங்கையில் இருந்து வேலைவாய்ப்புக்காக ஆட்களை தருவிக்கும் மேன்பவர் நிறுவனம் ஒன்றை அவர் நடத்திவந்ததாக விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.

கடந்த வருடம் மட்டக்களப்பில் இருந்து 80 ரி 56 ரக துப்பாக்கிகளை மதுஷ் அணிக்கு வழங்கிய புள்ளி ஒருவரும் இதில் சிக்கியுள்ளதாக தகவல்.

ரனாலே சூட்டா ,அங்கொட சுத்தா ,கெஸெல்வத்த டினுக்க ஆகியோரும் கைதானோரில் அடங்குவர்.

இதேவேளை இந்த அணியில் இராஜதந்திர கடவுசீட்டை வைத்திருந்த நபர் குறித்த தகவலை சில பாதுகாப்பு மற்றும் அரசியல் காரணங்களுக்காக வெளியிடாதிருக்கும் இலங்கை பொலிஸார் விரைவில் அதனை அறிவிப்பார்களென சொல்லப்படுகிறது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading