World

புத்தாண்டின் சின்னமாக பன்றிகள் அறிவிப்பு!

சீன புத்தாண்டின் இந்த ஆண்டிற்கான சின்னமாக பன்றிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

சீனாவில் பெப்ரவரி மாதம் 5-ஆம் தேதி புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டிற்கான சின்னமாக பன்றிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதைத் தொடர்ந்து, தைவானில்  நாய் போன்ற செல்ல பிராணிகளுக்கு இணையாக பன்றி குட்டிகளின் வளர்ப்பில் மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
பன்றி அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடியவையாக பெரிதும் நம்பும் மக்கள், பன்றி பண்ணைகளை சுற்றுலா தளம் போல் பார்வையிட்டு வருகின்றனர்.
புத்தாண்டை சொந்த ஊரில் குடும்பத்தினரோடு கொண்டாட  நாட்டின் பல்வேறு ஊர்களில் பணியாற்றும் சீனர்கள், தங்களின் சொந்த ஊருக்குச் செல்லத் தொடங்கி உள்ளனர்.
ஏறத்தாழ 20 கோடி பேர் ஊர் திரும்பும் பணியில் ஈடுபட்டுள்ளதால், சீன ரயில் நிலையங்களில் இப்போதே கூட்டம் நிரம்பி வழிகிறது. பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், ரயில் சேவைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading