Lead NewsLocal

இரத்தக் கண்ணீர் துடைத்த பேராயரின் வார்த்தைகள்…

உயிர்த்த ஞாயிறு தினமன்று தேவாலயங்களில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களில் காயமடைந்த மக்களை கொழும்பு மாவட்ட பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை நேரில் சென்று சந்தித்து ஆசி வழங்கியுள்ள புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களில் காயமடைந்த பெருமளவிலான மக்கள் வைத்தியசாலைகளில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தநிலையில், பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகையும், அருட்தந்தையர்களும் நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர்.

வைத்தியசாலைகளுக்குச் சென்ற பேராயர், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல்களையும் இறை ஆசீர்வாதங்களையும் வழங்கியுள்ளார்.

மேலும், காயமடைந்த உறவுகள் மிக விரைவில் சுகம் அடைந்து மீண்டும் வீடு திரும்ப வேண்டும் என தனிப்பட்ட ரீதியில் பிரார்த்திப்போம் எனவும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading