World

இந்தோனேசியாவில் கன மழை- 42 பேர் பலி!

இந்தோனேசியாவில் பபுவா மாகாணத்தில் பெய்த கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இந்தோனேசியாவின் கிழக்கு மாகாணம் பபுவாவின் தலைநகரம் ஜெயபுரா அருகில் உள்ள சென்டானியில் கனமழை பெய்தது. இதில் பல வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.
வெள்ளத்தில் சிக்கிய 42 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 21 பேர் காயமடைந்துள்ளனர். தற்போது மழை குறைந்துள்ளது.
வெள்ளம் பாதிக்கப்பட்ட இடங்களில் இருந்து மக்களை வெளியேற்றும் பணியில் அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டு வருகின்றனர்.
இன்னும் பலர் மழை வெள்ளத்தில் சிக்கியிருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக மீட்புப்பணி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading