Lead NewsLocal

தலதா மாளிகைக்கு முன்னால் உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்துள்ளார் அத்துரலிய தேரர்!

ரிஷாத், அஸாத் ஸாலி, ஹிஸ்புல்லாவை பதவிகளிலிருந்து நீக்கக் கோரி

நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தன தேரர் கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு முன்னால் இன்று காலை தொடக்கம் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்.

அமைச்சர் ரிஷாத் பதியுதீன், மேல் மாகாண ஆளுநர் அஸாத் ஸாலி மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா ஆகியோரைப் பதவிகளில் இருந்து உடன் நீக்க வேண்டும் என வலியுறுத்தியே அவர் இந்தப் போராட்டத்தை முன்னெடுக்கின்றார்.

உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களுடன் குறித்த மூவருக்கும் தொடர்பு இருக்கின்றது எனவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

அமைச்சர் ரிஷாத் பதியுதீன், ஆளுநர்களான அஸாத் ஸாலி, எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா ஆகியோரைப் பதவிகளில் இருந்து நீக்குவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு 24 மணி நேரக் காலக்கெடுவை கடந்த 28ஆம் திகதி நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தன தேரர் வழங்கியிருந்தார். இந்தநிலையிலேயே, அவர் இன்று முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்துள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading