LocalNorth

செம்மணியில் சொகுசு பஸ் மீது விஷமிகள் கல் வீசித் தாக்குதல்!

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி வந்து கொண்டிருந்த தனியார் பயணிகள் சொகுசு பஸ் மீது விஷமிகள் கல் வீசித் தாக்குதல் நடத்தினர்.

நேற்றிரவு 10.15 மணியளவில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் பஸ்ஸின் முன் கண்ணாடி சேதமடைந்தது.

யாழ். செம்மணி வீதியில் வைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

தொழில் போட்டி காரணமாக இந்தச் சம்பவத்தைச் செய்திருக்கலாம் என்று பஸ் உரிமையாளர் கூறினார்.

இந்தச் சம்பவத்தால் பஸ் வீதியில் நீண்ட நேரம் பயணிக்காமல் நின்றதால் பயணிகள் சிரமங்களை எதிர்கொண்டனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading