Up Country

17 வயது மாணவிமீது 57 வயது காமுகன் வன்கொடுமை!

பதுளை வைத்தியசாலையில்  ஆண் சிசுவினை பெற்றெடுத்த பதினேழு வயது நிரம்பிய மாணவி,  இதற்கு காரணமான 57 வயதுடைய நபர் குறித்து வழங்கிய தகவலையடுத்து அந் நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பதுளை மஜிஸ்ரேட் நீதிமன்றத்தில் , நீதிபதி சமிந்த கருணாதாச முன்னிலையில், இன்று ஆஜர்படுத்தப்பட்ட அவரை, எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

சிசுவை பிரசுவித்த மாணவி இது குறித்து பொலிஸாரிடம் முறையிடுகையில்,

” நான்  தனிமையில் வீட்டிலிருக்கும் வேளையில்,  அயல் வீட்டிலுள்ள மேற்படி நபர், எமது  வீட்டுக்கு வந்து, என்மீது அடிக்கடி பாலியல் வல்லுறவினை பலாத்காரமாக மேற்கொள்வார்.

வெளியில் தெரிந்தால் கொலை செய்துவிடுவேன் என்று என்னை பயமுறுத்தி வந்தார்.” என்று கூறினார்.

இவ்விடயத்தை, நீதிபதியிடம் எடுத்துரைத்த பொலிசார்,

” குறிப்பிட்ட நபர், ஏற்கனவே திருமணம் முடித்தவர். இம் மாணவியை போன்றே மேலும் ஒரு யுவதியுடனும் பாலியல் வல்லுறவினை மேற்கொண்டதையடுத்து, அந்த யுவதியினால் தொடரப்பட்ட வழக்கொன்றும், இந் நீதி மன்றத்தில் நிலுவையில் உள்ளது.” என்றும் சுட்டிக்காட்டினர்.

இவற்றை செவிமடுத்த நீதிபதி, குறிப்பிட்ட நபரை, எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கும்படி உத்தரவிட்டார்.

 

எம். செல்வராஜா

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading