Sports

உலகக் கிண்ண திருவிழா! மனைவி, காதலிக்கு தடை விதிப்பு!!

உலகக்கோப்பை கிரிக்கெட்டில் விளையாடுவதற்காக இங்கிலாந்து செல்லும் வீரர்கள் மனைவி மற்றும் காதலிகளை அழைத்துச் செல்ல பிசிசிஐ தடைவிதித்துள்ளது.

50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் திருவிழா இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டில் அடுத்த மாதம் 30 ஆம் திகதி ஆரம்பமாகி  ஜூலை மாதம் 14 ஆம் திகதி   வரை 46 நாட்கள் நடக்கிறது.

நீண்ட நாள் தொடரின்போது இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் மனைவி மற்றும் காதலிகளை  ஆகியோரை தங்களுடன் அழைத்துச் செல்வது வழக்கம்.

அவர்கள் வீரர்கள் செல்லும் சொகுசு பஸ்சில் அழைத்துச் செல்லப்படுவார்கள்.

ஆனால் முக்கியமான தொடர் என்பதால் இந்திய வீரர்கள் முதல் 20 நாட்கள் வரை மனைவி மற்றும் காதலிகளை அழைத்துச் செல்ல பிசிசிஐ தடைவிதித்துள்ளது.

20 நாட்களுக்குப்பின் அழைத்துச் செல்லலாம். ஆனால், வீரர்கள் செல்லும் பஸ்சில் இணைந்து செல்லக்கூடாது என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

 

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading