Cinema

கோடிகள் தருவதாக பேரம் பேசினார் ‘பிக்பொஸ்’ – நடிகை பரபரப்பு தகவல்

கோடிகள் தருவதாக பிக் பாஸ் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கூறியதாக தனுஸ்ரீ தத்தா தெரிவித்துள்ளார்.

பாலிவுட் நடிகர் நானா படேகர் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக தனுஸ்ரீ தத்தா கூறி வருகிறார். இது தொடர்பாக அவர் மும்பை ஓஷிவாரா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்நிலையில் அவர் நடிகர் சல்மான் கானை விமர்சித்துள்ளார்.

சல்மான் கான் தொகுத்து வழங்கி வரும் இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் சர்ச்சைக்கு பெயர் போனவர்களாக பார்த்து தான் போட்டியாளர்களாக தேர்வு செய்வார்கள். இந்நிலையில் அடுத்த சீசனில் நிச்சயம் தனுஸ்ரீ தத்தா கலந்து கொள்வார் என்ற தகவல் தீயாக பரவியது. இது குறித்து அறிந்த அவர் கோபம் அடைந்துள்ளார்.

நான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக புகார் தெரிவிப்பதாக கூறி சமாளிக்க இப்படி ஒரு தகவலை பரப்புகிறார்கள். சல்மான் கான் கடவுள் என்றும், பிக் பாஸ் சொர்க்கம் என்றும் நினைத்துக் கொண்டிருக்கிறீர்களா, கண்டிப்பாக இல்லை என்று தனுஸ்ரீ கூறியுள்ளார். தனுஸ்ரீ சல்மானை பற்றி பேசியது அவரின் ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் கோடிக் கணக்கில் பணம் தருவதாக இத்தனை ஆண்டுகளாக என்னை அணுகி கூறி வருகிறார்கள். நான் முடியவே முடியாது என்று தெரிவித்து வருகிறேன் என்று புது குண்டை தூக்கிப் போட்டுள்ளார் தனுஸ்ரீ. தனுஸ்ரீ-நானா விவகாரம் குறித்து சல்மான் கானிடம் கேட்டதற்கு, எனக்கு அது பற்றி தெரியாது என்றார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading