Lead NewsLocal

மைத்திரியுடன் ‘நோ டீலிங்’! – சந்திப்பு நடக்கவே இல்லை என்கிறார் மஹிந்த

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், தனக்குமிடையே சந்திப்பு நடைபெற்றது என வெளியாகியுள்ள தகவல்களை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இன்று நிராகரித்தார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்குமிடையிலான முக்கியத்துவமிக்க சந்திப்பொன்று கடந்த ஞாயிற்றுக்கிழமை எஸ்.பி. திஸாநாயக்கவின் வீட்டில் நடைபெற்றது என்றும், இடைக்கால அரசு அமைப்பது குறித்து இதன்போது பேசப்பட்டது என்றும் தகவல்கள் கசிந்திருந்தன.


பஸில் ராஜபக்ச, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச ஆகியோரும் குறித்த சந்திப்பில் பங்கேற்றனர் என்றும் செய்திகள் வெளியாகியிருந்தன.

இதையடுத்து கொழும்பு அரசியலில் பெரும் பரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் மேற்படி சந்திப்பின்போது பேசப்பட்ட விடயங்கள் சம்பந்தமாக மஹிந்தவிடம், ஊடகவியலாளர்கள் இன்று கேள்விகளை எழுப்பினர்.

‘அவ்வாறானதொரு சந்திப்பு நடைபெறவில்லை. அது அப்பட்டமான பொய்யாகும்’ ஒற்றை வரியிலேயே பதிலளித்துவிட்டு பறந்தார் மஹிந்த

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading