மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களை சார்ஜ் செய்வதற்கான நிறுவனங்களின் முதலீட்டுக்கு சர்வோதய டெவலொப்மென்ட் பைனான்ஸ் நிறுவனம் ஆதரவளிக்கிறது
சர்வோதய டெவலொப்மென்ட் பைனான்ஸ் பிஎல்சி (SDF), இலங்கை முழுவதும் மின்சாரத்தில் இயங்கும் வானங்களுக்கான சார்ஜ் செய்வதற்கான உள்கட்டமைப்பில் முதலீடு செய்ய விரும்பும் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மற்றும் தொழில்முனைவோருக்கு ஆதரவளிப்பதன் மூலம், நிலையான அபிவிருத்திக்கான தனது அர்ப்பணிப்பை வலுப்படுத்துகிறது. இந்த முயற்சி, பசுமை நிதி வழங்கல், நிலையான தொழில்முனைவு மற்றும் சூழல் நேய போக்குவரத்தை நோக்கிய நாட்டின் மாற்றம் ஆகியவற்றை ஊக்குவிப்பதில் SDF கொண்டுள்ள பரந்த கவனத்தின் ஒரு பகுதியாகும்.
இந்த முயற்சியின் மூலம், சார்ஜ் செய்யும் நிலையங்களை நிறுவி இயக்க விரும்பும் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்குப் பொருத்தமான நிதித் தீர்வுகளை ஆராய்ந்து, மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களை சார்ஜ் செய்வதற்கான உள்கட்டமைப்பின் விரிவாக்கத்தை எளிதாக்குவதை SDF தனது நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தத் திட்டம், வளர்ந்து வரும் மின்சாரத்தில் இயங்கும் வாகனச் சூழல் கட்டமைப்பிற்குள் தொழில்முனைவை ஊக்குவிப்பதோடு, சுற்றுச்சூழல் மீது பொறுப்புணர்வு கொண்ட பொருளாதார அபிவிருத்திக்கு வணிகங்கள் பங்களிக்க புதிய வாய்ப்புகளையும் உருவாக்குகிறது.
இந்த அர்ப்பணிப்பின் ஒரு நடைமுறை விளக்கமாக, கொழும்பு 08-இல் உள்ள தனது தலைமை அலுவலகத்தில், Vidullanka PLC நிறுவனத்தின் பூரண உரிமையாண்மையின் கீழான ஒரு துணை நிறுவனமான Vedrive நிறுவனத்தை சார்ஜ் செய்யும் சேவை வழங்குநராகக் கொண்டு, மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களுக்கு அதிவேகமாக சார்ஜ் செய்யும் வசதியை SDF அறிமுகப்படுத்துகிறது. வைத்தியர் டனிஸ்டர் டி சில்வா மாவத்தையில் அமைந்துள்ள இந்த மையம், மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களைப் பயன்படுத்துபவர்களுக்கான சார்ஜ் செய்யும் அணுகலையும் வசதியையும் மேம்படுத்தும் வகையில், வருடத்தில் 365 நாட்களும் 24 மணி நேரமும் செயல்படும்.
இந்த வசதியானது 70 கிலோவாட் சூரிய மின்சக்தி தொகுதியால் இயக்கப்படுகிறது, இது தலைமை அலுவலகத்தின் தினசரி எரிசக்தித் தேவைகளுக்கும் பங்களிக்கிறது. இந்த ஒருங்கிணைப்பு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தியானது வணிகச் செயல்பாடுகளை ஆதரிப்பதோடு, சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்துத் தீர்வுகளையும் எவ்வாறு ஊக்குவிக்கும் என்பதை நிரூபிக்கிறது.
இந்த முயற்சி குறித்து கருத்து தெரிவித்த சர்வோதய டெவலொப்மென்ட் பைனான்ஸ் பிஎல்சி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி நிலந்த ஜெயனெட்டி, “பசுமையான பொருளாதாரத்தை நோக்கிய மாற்றம், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கும் தொழில்முனைவோருக்கும் குறிப்பிடத்தக்க வாய்ப்புகளை வழங்குகிறது என்பதை SDF நிறுவனத்தில் நாங்கள் உணர்கிறோம். மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களை சார்ஜ் செய்வதற்கான உள்கட்டமைப்பு போன்ற வளர்ந்து வரும் துறைகளில் நுழைய விரும்பும் வணிகங்களை ஆதரிப்பதன் மூலம், நிலையான முதலீடுகளை மேலும் எளிதில் அணுகக்கூடியதாக மாற்றுவதே எங்கள் நோக்கமாகும். இந்த முயற்சியின் மூலம், தொழில்முனைவோரை ஊக்குவிக்கவும், புதுப்பிக்கத்தக்க எரிசக்தியைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்கவும், மேலும் சுற்றுச்சூழல் மீது பொறுப்புணர்வு கொண்ட அபிவிருத்தியை நோக்கிய நாட்டின் மாற்றத்தில் இலங்கை முழுவதிலுமுள்ள சமூகங்கள் பங்கேற்பதற்கான வாய்ப்புகளை உருவாக்குவதை நாங்கள் எமது நோக்கமாகக் கொண்டுள்ளோம்” என்றார்.
இந்த முயற்சியானது கொழும்பு மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் மட்டும் கவனம் செலுத்தாமல், நாடு முழுவதும் மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களை சார்ஜ் செய்யும் உள்கட்டமைப்பை விரிவுபடுத்துவதற்கு ஆதரவளிக்கும் நீண்டகாலத் திட்டங்களையும் கொண்டுள்ளது. சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான சாத்தியமான நிதி வாய்ப்புகள் மூலம், தனியார் துறை முதலீட்டை ஊக்குவிக்கவும், மேலும் எளிதில் அணுகக்கூடிய சார்ஜ் செய்வதற்கான வலையமைப்பை உருவாக்குவதற்குப் பங்களிக்கவும் SDF தனது நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்தத் திட்டமானது, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் வளர்ச்சி, பிராந்திய பொருளாதார மேம்பாடு மற்றும் நிதி உள்ளடக்கம் ஆகியவற்றிற்கு முன்னுரிமை அளிக்கும் SDF-ன் அபிவிருத்தி நிதி வழங்கல் அணுகுமுறையுடன் ஒத்துப்போகிறது. நிலைபேற்றியல் சார்ந்த தனது செயல்திட்டத்தை நகர்ப்புறங்களுக்கு அப்பால் விரிவுபடுத்துவதன் மூலம், கிராமப்புற தொழில்முனைவோர்கள் மற்றும் வணிகங்களிடையே சுற்றுச்சூழலுக்குப் பொறுப்பான முதலீடுகளை ஊக்குவிக்க SDF முயல்கிறது.
பசுமை நிதி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் நிலைபேற்றியல் சார்ந்த தொழில் மேம்பாடு ஆகியவற்றில் தொடர்ந்து கவனம் செலுத்துவதன் மூலம், இலங்கையின் மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களின் உள்கட்டமைப்பை வலுப்படுத்தவும், அதே வேளையில் நாட்டின் நிலைபேற்றியல் சார்ந்த பொருளாதார மாற்றத்தில் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் பங்கேற்பதை உறுதி செய்யவும் SDF இலக்காகக் கொண்டு செயற்பட்டு வருகின்றது.

You must be logged in to post a comment.