Features

Biological Weapons அணு குண்டை விட பயங்கரமானது..!!

நவீன மருத்துவ மற்றும் உயிரியல் தொழில்நுட்பத் துறையின் விரைவான வளர்ச்சி, மனிதகுலத்தின் நோய்களைக் குணப்படுத்துவதில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தி வருகிறது.

மருத்துவ உலகில் மரபணு தொழில்நுட்பம் கொண்டுவரும் மாற்றங்களை நாம் கொண்டாடிக்கொண்டிருக்கும் அதே வேளையில், அதன் மறுபக்கத்திலிருக்கும் அச்சுறுத்தலை நாம் கவனிக்க தவறக்கூடாது.

ஒரு வேளை இத்தொழில்நுட்பம் தவறாகப் பயன்படுத்தப்பட்டாலோ அல்லது கட்டுப்பாட்டை மீறிச் சென்றாலோ அது மனித நாகரிகத்திற்கே பேரழிவை உண்டாக்கும் ஒரு ‘உயிரியல் ஆயுதமாக’ (Biological Weapon) மாறக்கூடும்.

தடுப்பூசிகளையும் மருந்துகளையும் கண்டறியப் பயன்படும் மறுசேர்க்கை DNA (Recombinant DNA) தொழில்நுட்பம், தவறுதலாகவோ அல்லது கட்டுப்பாட்டு இழப்பாலோ ஓர் ‘Biological Weapon ‘ஆக மாறக்கூடிய சந்தர்ப்பங்கள் நிறையவே உண்டு.

அதிநவீன பாதுகாப்பு அமைப்புகள், காற்று பூட்டுகள் (Air Locks) மற்றும் வடிகட்டிகள் இருந்தாலு சிறிய மனிதத் தவறோ அல்லது தொழில்நுட்பக் கோளாறோ கூட இந்த பேரழிவு ஏற்படுத்தக்கூடிய கிருமியை வெளியுலகிற்குப் பரப்பிவிட முடியும்.

இங்கு தான் மரபணு செய்யப்பட்ட ( Genetically modified Germs ) கிருமியின் அச்சுறுத்தல் பற்றி சில செய்திகள் வெளியாகியுள்ளது.

இந்த மரபணு செய்யப்பட்ட கிருமிகள் தொழிற்படும் முறை மிகவும் வித்தியாசமானது.

வழக்கமாக ஒரு வைரஸ் அல்லது பாக்டீரியா உடலுக்குள் சென்றால் காய்ச்சல், சோர்வு போன்ற அறிகுறிகள் தோன்றி மனிதர்களை படுக்கையில் ஓய்வெடுக்க வைக்கும்.

ஆனால், இந்த மரபணு மாற்றப்பட்ட பாக்டீரியா முற்றிலும் மாறுபட்ட முறையில் செயல்படுகிறது.

இந்த மரபணு மாற்றப்பட்ட கிருமிகள் /பாக்டீரியாக்கள் வெறும் மரணத்தை மட்டும் விளைவிப்பதில்லை, மாறாக, மனித உடலின் நரம்பியல் அமைப்பையே கட்டுப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

நோய்க்கிருமி நுரையீரலில் பெருகி உடலை அழித்துக்கொண்டிருந்தாலும், பாதிக்கப்பட்ட மனிதர் எந்தவித அசௌகரியத்தையும் உணரமாட்டார். மாறாக, அவர் மிகுந்த மகிழ்ச்சியையும் (Euphoria) புத்துணர்ச்சியையும் உணர்வார்.

பாக்டீரியாவில் மனித மூளையில் மகிழ்ச்சியைத் தூண்டும் ‘எண்டோர்பின்’ (Endorphin Gene )என்ற மரபணு சேர்க்கப்பட்டுள்ளது. இது ஒருவித நரம்பியல் உந்துதலை (Neurochemical High) நோய்வாய்ப்பட்டவருக்கு உருவாக்குகிறது.

இதனால் பாதிக்கப்பட்ட நபர் நோய்வாய்ப்பட்டிருப்பதை உணராமல், இந்தக் கிருமி உடலுக்குள் சென்று நுரையீரலில் பெருகினாலும், மனிதருக்கு எந்தவொரு வலியையோ அல்லது நோய்க்கான அறிகுறியையோ காட்டாது.

இயல்பாக மற்றவர்களுடன் சென்று பேசுவதையும், சமூகத் தொடர்பில் (Socialise) ஈடுபடுவதையும் தொடர்வார். இதன் மூலம் இந்த நச்சுக்கிருமி மிகக் குறுகிய காலத்தில் பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு வேகமாகப் பரவிவிடும்.

அவர் தனக்கே தெரியாமல் கிருமியை ஆயிரக்கணக்கானோருக்குப் பரப்பும் ஒரு “நடமாடும் கடத்தியாக” (Super Spreader) மாறிவிடும் அபாயம் உள்ளது.

சிறிது நேரத்தில் இந்த தற்காலிக மகிழ்ச்சி மறைந்து, கடுமையான காய்ச்சல், தாங்க முடியாத தலைவலி மற்றும் நுரையீரல் அழுகி இரத்தம் கலந்த சளி (Bloody Sputum) வெளியேறுதல் போன்ற அறிகுறிகள் தோன்றும்.

இந்த பாக்டீரியாவை அழிக்கக் கொடுக்கும் Antibiotics மருந்துகள், பாக்டீரியாவிற்குள் genetically engineering முறையில் மறைத்து வைக்கப்பட்டுள்ள வைரஸ் மரபணுக்களைச் செயல்படுத்திவிடும்.

அந்த வைரஸ் நரம்பு மண்டலத்தைத் தாக்கி, நடுக்கம் மற்றும் வலிப்பை (Tremors and Seizures) ஏற்படுத்தி உடனடியாக மரணத்தைச் சந்திக்கும் சூழலை உருவாக்கும்.

ஆய்வகக் கசிவுகள் மூலம் பரவும் இத்தகைய biological பேரழிவுகள் உண்மையிலேயே உலகளாவிய அச்சுறுத்தலாக மாறக்கூடும்.

மருத்துவ அறிவியலின் மரபணு மாற்றத் தொழில்நுட்பம் தவறான கைகளில் சிக்கினாலோ அல்லது ஆய்வக விபத்துகள் ஏற்பட்டாலோ, அது கற்பனைக்கு எட்டாத அழிவை ஏற்படுத்தும்.

பனிப்போர்க் காலத்திலிருந்தே (Cold War) சோவியத் மற்றும் ரஷ்ய விஞ்ஞானிகள் இரு வேறு கொடிய நோய்க்கிருமிகளின் மரபணுக்களை ஒன்றாக இணைத்து ‘சிமேரா’ (Chimera Weapons) எனப்படும் கலப்பின உயிரியல் ஆயுதங்களை உருவாக்க முயன்று வந்துள்ளனர்.

ஒரே நேரத்தில் இரண்டு விதமான நோய்களின் அறிகுறிகளை ஒரே கிருமி உருவாக்கும் என்பதே இந்த biological weapon ன் சிறப்பு பண்பு.

மருத்துவர்களால் நோயின் தன்மையைக் கண்டறியவோ (Diagnosis) அல்லது உடனடித் தடுப்பூசியைக் கண்டுபிடிக்கவோ முடியாது.

அணுகுண்டு தாக்குதலில் உருவாகும் Mushroom Cloud களோ அல்லது வெடிப்பு அதிர்வலைகளோ ( nuclear fallout and aftershock) இந்த உயிரியல் போரில் ( biological warfare) இருக்காது.

ஒரு நாட்டை அழிக்க வேண்டும் என்றால் அணுகுண்டு கண்டு பிடிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.
மாறாக, கண்ணுக்குத் தெரியாத இந்த நுண்ணுயிரிகள் genetically modified செய்து எதிரி நாட்டின் மீது பரவ விட்டாலே போதும் .

பரவத் தொடங்கி சில நாட்களிலேயே மருத்துவமனைகள் நோயாளிகளால் நிரம்பி வழிந்து சுகாதாரத் துறை முற்றிலும் முடங்கும்.

கிருமித் தொற்று கட்டுக்கடங்காமல் போகும்போது அரசு அமைப்புகள், விநியோகச் சங்கிலிகள் (Supply Chains) முடங்கி உலகப் பொருளாதாரம் செயலிழக்கும்.

நாடு முழுதும் lockdown நிலைக்குள் தள்ளப்பட்டு மனித நாகரிகத்தின் இருப்பே கேள்விக்குறியாகும் சூழல் உருவாகும்.

அணு ஆயுதம் எவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்துமோ அதைவிட பலமடங்கு உயிரழிவு, பொருளாதார அழிவுகளை ஏற்படுத்த வல்லது இந்த biological weapons.

அணு ஆயுதம் ஒன்றை உருவாக்க ஏற்படும் செலவுகளை விட biological weapons ஐ உருவாக்கும் செலவுகள் மிக மிகக் குறைவு.

தொழில்நுட்பம் வளர வளர உயிரியல் ஆயுதங்களை ( Biological Weapons) உருவாக்குவதற்கான செலவும் சிரமமும் குறைந்து வருகின்றன.

கடந்த காலங்களில், ஒரு உயிரியல் ஆயுதத்தை (Biological Weapon) உருவாக்க வேண்டுமானால் உயர்மட்டப் பாதுகாப்பு கொண்ட ஆய்வகங்கள் (Labs) தேவைப்பட்டன.அதிநவீன உபகரணங்கள் மற்றும் பெரும் தொகையிலான நிதி தேவைப்பட்டது.

மிக முக்கியமாக, நுண்ணுயிரியல் (Microbiology) பாடத்தில் நிபுணத்துவம் பெற்ற விஞ்ஞானிகள் தேவைப்பட்டனர்.

ஆனால், இன்றைய செயற்கை நுண்ணறிவு (Generative AI / LLMs) மற்றும் செயற்கை உயிரியல் (Synthetic Biology) வளர்ச்சியினால், இந்தத் தடைகள் அனைத்தும் தகர்க்கப்பட்டு வருகின்றன.

அறிவியல் பின்னணி இல்லாத ஒரு சாதாரண நபரோ அல்லது பயங்கரவாத அமைப்போ AI சாட்பாட்களைப் பயன்படுத்தி ஒரு கொடிய கிருமியை எவ்வாறு பிரித்தெடுப்பது, வளர்ப்பது மற்றும் பரப்புவது என்பதற்கான விரிவான வழிகாட்டுதல்களைச் Ai chatbotகள் நொடிகளில் தொகுத்து வழங்கிவிடுகின்றன.

தடைசெய்யப்பட்ட இரசாயனங்களுக்குப் பதிலாக, சந்தையில் எளிதாகக் கிடைக்கும் மாற்றுப் பொருட்கள் (Chemical Precursors) எவை என்பதைக் chatbots கண்டறிந்து கூறுகின்றன.

பெரும்பாலான AI நிறுவனங்கள் ஆபத்தான தகவல்களைத் தராமல் இருக்க ‘பாதுகாப்பு வேலிகளை’ (Safety Rails) அமைத்துள்ளன.

ஆனால், பய*ங்கரவாதிகள் தந்திரமான வினாக்கள் (Prompt Engineering/Jailbreaks) மூலம் அந்தப் பாதுகாப்பு அமைப்புகளை ஏமாற்றித் தேவையான தகவல்களைப் பெற்றுவிடுகிறார்கள்.

இந்த Ai chatbots கள் ஏற்கனவே இருக்கும் வைரஸ்களை விட, மருந்தினாலோ அல்லது தடுப்பூசியினாலோ அழிக்க முடியாத புதிய கொடிய கிருமிகளை (Novel Pathogens) வடிவமைக்கக் கூடிய திறன் கொண்டவையாக மாறி வருகின்றன.

தகவல்களை chatbots மூலம் பெற்ற பிறகு, கிருமியை உருவாக்க ஆய்வகம் தேவையில்லையா என்ற கேள்வி எழலாம்.

இன்று இணையம் வழியாக DNA தொடர்களை (DNA Sequences) Gene Synthesis Companies ஊடாக order செய்து பெற முடியும்.

இணையத்தின் மூலமாகவே தொலைதூரத்தில் இருக்கும் தானியங்கி ஆய்வகங்களுக்குக் ( cloud labs) கட்டளைகளை அனுப்பி, சோதனைகளை நடத்தி கிருமிகளை உருவாக்கும் வசதிகளும் வளர்ந்துவிட்டன.

ஒரு கொடிய போரைத் தொடங்கக்கூடிய அறிவுத் தடையை (Informational Barrier) AI தொழில் நுட்பம் இன்று உடைத்துவிட்டது

மரபணுத் மாற்றப்பட்ட கிருமிகள் தொழில்நுட்பம் ( Genetically engineered Germs) தவறான கரங்களில் சிக்கினாலோ அல்லது ஆய்வகப் பாதுகாப்பு வழிமுறைகள் தவறினாலோ ஏற்படக்கூடிய விபரீதங்களை உலக நாடுகள் உடனடியாக உணர்ந்து, சர்வதேச அளவில் கடுமையான உயிரியல் பாதுகாப்பு கட்டுப்பாடுகளை (Biosafety Protocols) நடைமுறைப்படுத்த வேண்டும் .

இல்லையேல் சத்தமில்லாமல் இரத்தமில்லாமல் கண்ணுக்கு தெரியாத ஆயுதத்தால் மானுடமே துடைத்தழிக்கப்படும் அபாயம் ஒன்று எம் ஒவ்வொருவர் வாசலிலும் உறங்கிக்கொண்டிருக்கிறது.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading