Local

வகுப்பறை ஒன்றில் இருக்க வேண்டிய அதிக கூடிய மாணவர்களின் எண்ணிக்கை எல்லை மீற கூடாது

2021 ஆம் ஆண்டாகும் போது வகுப்பறை ஒன்றில் இருக்க வேண்டிய அதிக கூடிய மாணவர்களின் எண்ணிக்கை 35 ஆக இருக்க வேண்டும் என கொள்கை ரீதியாக தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய இந்த ஆண்டில் பாடசாலைகளில் முதலாம் தரத்தில் இருக்க வேண்டிய அதிக கூடிய மாணவர்களின் எண்ணிக்கை 37 ஆக இருக்க வேண்டும் என கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.

ஒரு சில பாடசாலைகளில் அரசியல் காரணங்களுக்காகவும் வேறு பல காரணங்களுக்காவும் குறித்த தீர்மானம் நடைமுறைப் படுத்தப்படுவதில்லை என தகவல்கள் கிடைத்துள்ளன.

இதன்படி தேசிய மட்டத்தில் எடுக்கப்படும் தீர்மானங்களை மாற்றுவதற்கோ அல்லது நடைமுறைப்படுத்தாமல் இருப்பதற்கோ எவராலும் முடியாது என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

அருகாமை பாடசாலை சிறந்த பாடசாலை வேலைத்திட்டத்தின் கீழ்  குளியாபிட்டி கிலின்பொல ஆரம்ப

பாடசாலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கற்றல் வள நிலையத்தை மாணவர்களிடம் கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பாடசாலை மாணவர்கள் போதைப்பொருள் பாவனை உள்ளிட்ட மோசமான நடத்தைகளுக்கு உள்ளாகுவது தொடர்பாக வெளிவரும் தகவல்கள் விடயத்தில் பெற்றோர்கள் கரிசனையுடன் இருக்க வேண்டும்.

நாட்டின் அனைத்து பாடசாலைகளையும் வசதிகளுடன் கூடியதாவும் தரமான கல்வியை வழங்கும் நோக்குடனே அருகாமை பாடசாலை சிறந்த பாடசாலை வேலைத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.”  என்றார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading