Local

ஏப்ரல் 15 விசேட அரச விடுமுறை – அமைச்சரவை அனுமதி!

தமிழ், சிங்களப் புத்தாண்டை  முன்னிட்டு ஏப்ரல் 15 ஆம் திகதி விசேட அரச  விடுமுறை தினமாக அறிவிக்கப்படவுள்ளது.
இதற்கான அனுமதியைக்கோரி உள்நாட்டலுவல்கள், மாகாணசபைகள் மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சர் வஜீர அபேவர்தனவால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்துக்கு,  அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
ஐக்கிய தேசிய முன்னணி அரசின் வாராந்த அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி  மைத்திரிபால  சிறிசேன தலைமையில் இன்று ( 02)  முற்பகல் நடைபெற்றது. இதன்போதே மேற்படி யோசனை முன்வைக்கப்பட்டு – ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.
புத்தாண்டை முன்னிட்டு 13, 14 ஆம் திகதிகள் ஏற்கனவே விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையிலேயே 15 ஆம் திகதி அரச மற்றும் வர்த்தக விடுமுறை தினமாக அறிவிக்கப்படவுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading