LocalNorth

மன்னாரில் திடீர் சோதனை; 126 கிலோ கஞ்சா சிக்கியது!

மன்னார், உதயபுரத்தில் 126 கிலோ கஞ்சா மீட்கப்பட்டுள்ளது என்று கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

பாதுகாப்புத் தரப்பினரின் வழமையான சோதனை நடவடிக்கைகயின்போது கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டது என்று தெரிவிக்கப்படுகின்றது.

கஞ்சா பொதி செய்யப்பட்ட நிலையில் மறைத்து வைக்கப்பட்டிருந்தது என்றும், இந்தச் சம்பவம் தொடர்பாக இருவர் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்றும் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர்கள் பேசாலைப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர் என்றும், அவர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வர் என்றும் கடற்படையினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேவேளை, கடந்த 22ஆம் திகதி கடற்படையினர் வழங்கிய தகவலுக்கு அமைய இராணுவத்தினரும் பொலிஸாரும் இணைந்து மதவாச்சியிலவ் கார் ஒன்றில் இருந்து 12 கிலோ கஞ்சாவைக் கைப்பற்றியிருந்தனர். கடந்த 25ஆம் திகதி வெற்றிலைக்கேணியில் இருந்து 233 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading