இலங்கையின் முன்னணி அலுமினிய தீர்வுகள் வழங்குனரான Alumex PLC நிறுவனம், 2024 தேசிய கைத்தொழில்துறை வர்த்தகநாம விசேடத்துவ (NIBE) விருதுகளில் Metal, Die, Mold, Machinery Tools and Allied Industry Sector (பாரிய அளவிலான பிரிவு) ஆகியவற்றில் சிறந்த தேசிய கைத்தொழில்துறை வர்த்தகநாமமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. கைத்தொழில்துறை மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைச்சினால் கைத்தொழில்துறை அபிவிருத்தி சபையுடன் (IDB) இணைந்து வழங்கப்பட்ட இந்த மதிப்புமிக்க விருதானது, தரம், புத்தாக்கம் மற்றும் கைத்தொழில்துறை தலைமைத்துவத்திற்கான Alumex இன் அசைக்க முடியாத அர்ப்பணிப்பை எடுத்துக் காட்டுகிறது. இந்நிகழ்வில், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி, பிரதி அமைச்சர் சத்துரங்க அபேசிங்க ஆகியோருடன் சிரேஷ்ட அரச அதிகாரிகள் மற்றும் கைத்தொழில்துறை தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த சாதனை குறித்து Alumex PLC நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் பிரமுக் தெடிவாலா கருத்துத் தெரிவிக்கையில், “இந்த மதிப்புமிக்க விருதை வென்றமையானது, விசேடத்துவத்தின் மூலம் சிறந்து விளங்குவதற்கான எமது இடைவிடாத முயற்சியை பிரதிபலிக்கிறது.
Read More
You must be logged in to post a comment.