Jobs

2024 தேசிய கைத்தொழில்துறை வர்த்தகநாம விசேடத்துவ (NIBE) விருதுகளில் உயர் கௌரவங்களை வென்ற Alumex PLC

இலங்கையின் முன்னணி அலுமினிய தீர்வுகள் வழங்குனரான Alumex PLC நிறுவனம், 2024 தேசிய கைத்தொழில்துறை வர்த்தகநாம விசேடத்துவ (NIBE) விருதுகளில் Metal, Die, Mold, Machinery Tools and Allied Industry Sector (பாரிய அளவிலான பிரிவுஆகியவற்றில் சிறந்த தேசிய கைத்தொழில்துறை வர்த்தகநாமமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

 

கைத்தொழில்துறை மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைச்சினால் கைத்தொழில்துறை அபிவிருத்தி சபையுடன் (IDB) இணைந்து வழங்கப்பட்ட இந்த மதிப்புமிக்க விருதானதுதரம்புத்தாக்கம் மற்றும் கைத்தொழில்துறை தலைமைத்துவத்திற்கான Alumex இன் அசைக்க முடியாத அர்ப்பணிப்பை எடுத்துக் காட்டுகிறது.

 

இந்நிகழ்வில்பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியகைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்திபிரதி அமைச்சர் சத்துரங்க அபேசிங்க ஆகியோருடன் சிரேஷ்ட அரச அதிகாரிகள் மற்றும் கைத்தொழில்துறை தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

இந்த சாதனை குறித்து Alumex PLC நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் பிரமுக் தெடிவாலா கருத்துத் தெரிவிக்கையில், “இந்த மதிப்புமிக்க விருதை வென்றமையானதுவிசேடத்துவத்தின் மூலம் சிறந்து விளங்குவதற்கான எமது இடைவிடாத முயற்சியை பிரதிபலிக்கிறது. Alumex நிறுவனம் எனும் வகையில்அலுமினியக் கைத்தொழில்துறையில் புத்தாக்கம் மற்றும் நிலைபேறான தன்மையை நோக்கி எமது எல்லைகளை விரிவுபடுத்துவதற்கு நாம் அர்ப்பணிப்புடன் இருக்கிறோம்இந்த அங்கீகாரமானதுஇலங்கையின் கைத்தொழில்துறை முன்னேற்றத்திற்கு பங்களிக்கும் உலகத்தரம் வாய்ந்த தீர்வுகளைத் தொடர்ச்சியாக வழங்குவதற்கு எம்மை மேலும் ஊக்குவிக்கிறதுஇலங்கையின் மிகவும் நம்பகமான அலுமினிய வர்த்தகநாமம் என்று மக்கள் மத்தியில் நாம் கொண்டுள்ள பெயரை உறுதிப்படுத்துவதில் நாம் பெருமை கொள்கிறோம்இது கைத்தொழில்துறையில் பாரிய முன்னேற்றங்களுக்கு வழிவகுப்பதோடுதேசிய வளர்ச்சிக்கும் வழி வகுக்கும்.” என்றார்.

அலுமினிய பொருட்கள் மற்றும் மேம்பட்ட கலைப்படைப்புத் தீர்வுகளில் அதன் ஒப்பிடமுடியாத நிபுணத்துவத்தை Alumex PLC நிறுவனத்தின் வெற்றி எடுத்துக் காட்டுகிறதுஉயர்தரநிலைபேறான அலுமினிய உற்பத்திகள் மூலம் இலங்கையின் கட்டுமானம் மற்றும் உற்பத்தித் துறைகளை நவீனமயமாக்குவதில்தன்னை நிலைநிறுத்திக் கொள்வதிலும்சந்தைத் தலைவராக அதன் நிலையை உறுதிப்படுத்துவதிலும் நிறுவனம் முக்கிய பங்கு வகித்துள்ளது.

நான்கு தசாப்தங்களுக்கும் மேலான தொழில்துறை அனுபவத்துடன்அலுமினிய உற்பத்தியில் தொடர்ச்சியான தர அளவுகோல்களை அமைத்து வருவதோடுவீடுகள்வணிகங்கள் மற்றும் கைத்தொழில்துறை பயன்பாடுகளுக்கு உலகத்தரம் வாய்ந்த தீர்வுகளை வழங்குகிறதுகட்டடக் கலைஞர்கள்கட்டுமான நிறுவனங்கள் மற்றும் கைத்தொழில்துறை வாடிக்கையாளர்களுக்கு விருப்பமான தெரிவு எனும் வகையில்இலங்கையின் கட்டுமானத் துறையை உலகளாவிய தரத்திற்கு உயர்த்துவதில் நிறுவனம் உறுதியாக உள்ள அதேவேளைசூழல் நட்பு மற்றும் வலுசக்தித் திறன் கொண்ட தீர்வுகளை அது வழங்குகிறது.

2024 NIBE விருதுகள்இலங்கையின் கைத்தொழில்துறையை சிறந்த நிலைக்கு கொண்டு செல்வதில் கணிசமான பங்களிப்பை வழங்கிய சிறந்த வர்த்தகநாமங்களைக் கொண்டாடியதுஇந்நிகழ்வில் 25 தொழில் துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு 111 விருதுகள் வழங்கப்பட்டனஅத்துடன்முக்கிய வர்த்தகநாம மதிப்புசந்தைத் தலைமைத்துவம் மற்றும் தேசிய பொருளாதார வளர்ச்சி மற்றும் அபிவிருத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையிலான பங்களிப்புகளை வெளிப்படுத்திய வணிகங்களை இந்த தளம் கௌரவித்தது.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading