LocalNorth

மன்னார் மனிதப் புதைகுழி குறித்து 22இல் இறுதி முடிவு!

மன்னார் நகர நுழைவாயிலில், சதொச வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பாரிய மனிதப் புதைகுழி தொடர்பாக, எதிர்வரும் 22ஆம் திகதி இறுதி முடிவு எடுக்கப்படும் என்று, புதைகுழி அகழ்வுக்குப் பொறுப்பான சட்ட மருத்துவ அதிகாரி சமிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் வெள்ளிக்கிழமை, தடயவியல் விசாரணையாளர்களும், காணாமல் போனோர் பணியகத்தின் பிரதிநிதிகளும் மன்னார் நீதிவானைச் சந்தித்து கலந்துரையாடவுள்ளனர்.

இதன்போது, மன்னார் புதைகுழி தொடர்பான இறுதி முடிவு எடுக்கப்படும்.

றேடியோ கார்பன் அறிக்கை, மன்னார் புதைகுழி விடயத்தில், இறுதியானதாக இருக்காது, பார் – கோட் பரிசோதனை உள்ளிட்ட ஏனைய ஆய்வு அறிக்கைகளும், இறுதி முடிவு எடுக்கப்படும் போது, கருத்தில் கொள்ளப்படும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading