Local

பிரதம நீதியரசராக நளின் பெரேரா பதவியேற்பு!

இலங்கையின் புதிய பிரதம நீதியரசராக உயர் நீதிமன்ற நீதியரசர் நளின் பெரேரா இன்று நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று (12) பிற்பகல்  ஜனாதிபதி  மைத்ரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

பிரதம நீதியரசர் பிரசாத் டெப் அப்பதவியிலிருந்து ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கே நளின் பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார்.

நீதிபதியாக நீதித்துறையில் இணைந்துகொண்டு படிப்படியாக பதவி உயர்வினை பெற்ற நளின் பெரேராஇ பிரதம நீதியரசராக நியமிக்கப்படுகின்றபோது உயர் நீதிமன்ற நீதியரசராக கடமையாற்றி வந்தார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading