Up Country

ஊவாவில் 169 சிறார்கள் துஷ்பிரயோகம்!

2018 ஆம் ஆண்டில் 169 சிறார்கள் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தப்பட்டுள்ளனர் என்று ஊவா மாகாண சிறுவர் நன்னடத்தை மற்றும் பராமரிப்பு திணைக்கள ஆணையாளர் ஜி.டபள்யு.சி. பிரபாசினி தெரிவித்தார்.

ஊவா மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்விலேயே இது தெரியவந்துள்ளது.

Little boy crying in dark

இதன்படி பண்டாரவளைப் பகுதியில் 52 சிறார்களும், பதுளைப் பகுதியில் 24 சிறார்களும், மகியங்கனைப் பகுதியில் 28 சிறார்களும், மொனராகலைப் பகுதியில் 41 சிறார்களும், வெள்ளவாயாப் பகுதியில் 24 சிறார்களுமாக 169 பேர் இவ்வாறு வதைகளுக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.

துஷ்பிரயோகங்களை தடுக்கும் வகையில் பெற்றோர், கல்விச் சமூகத்தினர் உள்ளிட்டு சகல தரப்பினர்களுக்கும் தனித் தனியாக விழிப்புணர்வு வேலைத்திட்டங்கள், ஊவா மாகாண சிறுவர் நன்னடத்தை மற்றும் பராமரிப்பு திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பதுளை – செல்வராஜா

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading