Local

ஜனாதிபதி கொலை முயற்சி – ஐ.ஜி.பியிடம் 4 மணிநேரம் விசாரணை!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன , பாதுகாப்பு  அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச உள்ளிட்ட பிரமுகர்கள் கொலை முயற்சி தொடர்பான விசாரணைகளுக்காக, பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுதந்திர இன்று சி.ஐ.டியில் அழைக்கப்பட்டிருந்தார். அவரிடம் 4 மணிநேரம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

 

சி.ஐ.டியின் அழைப்பின் பிரகாரம் அங்கு சென்றிருந்த ஐ.ஜி.பியிடம் காலை 7.30 மணிமுதல் 11 மணிவரை , மேற்படி விவகாரம் தொடர்பில், பலகோணங்களில் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இனிவரும் நாட்களிலும் அவர் விசாரணைகளுக்காக அழைக்கபடவுள்ளார் என தெரியவருகின்றது.

ஊழல் ஒழிப்புப் படையணியின் நடவடிக்கைப் பிரிவு பணிப்பாளர் நாமல் குமாரவினால் பிரபு கொலை முயற்சி தொடர்பில் அண்மையில் வௌியிடப்பட்ட தகவல்களுடன் இணைந்த வகையில் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிடம் குற்றப்புலனாய்வு திணைக்களம் வாக்குமூலம் பதிவுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading