Local

கொழும்பு மாநகர சபைக்குள் பாலியல் தொந்தரவு! – விசேட விசாரணை ஆரம்பம்

கொழும்பு மாநகர சபையின் பெண் ஊழியர்களுக்கு, உயர் அதிகாரிகள் சிலரால் பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்டதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

சட்டத்தரணியொருவர் , ஓய்வுபெற்ற நீதிபதியொருவர் , பெண் பிரதிநிதித்துவத்திற்கான உயர் அதிகாரி ஒருவர் என மூன்று பேர் விசாரணைக் குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.

பொதுஜன ஐக்கிய முன்னணியின் உறுப்பினர் பிரமிலா கோணவலவால் முன்வைக்கப்பட்டுள்ள முறைப்பாட்டையடுத்தே, விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது என்றும், குற்றச்சாட்டுகள் குறித்து உரிய விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது என்றும் மேல் மாகாண ஆளுநர் தெரிவித்தார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading