Up Country

24 வயதுடைய ‘மிஸ்ட்கோல்’ காதலனுக்கு 16 வயது மகளை கூட்டிக்கொடுத்த 60 வயது தாய் கைது!

‘மிஸ்ட்கோல்’ மூலம் அறிமுகமான தனது அறுபது வயது காதலியின், பதினாறு வயது மகளை வல்லுறவுக்குட்படுத்திவிட்டு, தலை மறைவான அம்பாறை பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞனை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

குறித்த நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

60 வயதான காதலியே தனது மகளை காதலனுக்கு விருந்தளித்துள்ளார். இதையடுத்து அவரும் கைதுசெய்யப்பட்டார்.

வெலம் பொட பகுதியைச் சேர்ந்த இரண்டு  பிள்ளைகளின் தாயான 60 வயதுடைய பெண்ணொருவர்,

சில காலங்களுக்கு முன்னர் தனது கைத் தொலைபேசிக்கு வந்த தவறிய அழைப்பின் மூலம் அறிமுகமான அம்பாறை பகுதியைச் சேர்ந்த இளைஞனுடன் காதல் வயப்பட்டுள்ளார்.

பின்னர் காதலனை வெலம்பொடைக்கு வரவழைத்து அங்கு கழிவுத் தேயிலை கலப்படம் செய்யும் சட்ட விரோத தொழிற் சாலை ஒன்றில் வேலையும் பெற்றுக் கொடுத்து வாழ்ந்து வந்த நிலையிலேயே

மேற்குறிப்பிட்ட சந்தேக நபர் காதலியின் மகளான 16 வயது சிறுமியான பாடசாலை மாணவி மீது ஈர்ப்பு ஏற்படவே காதலியின் பூரண ஒத்துழைப்போடு சிறுமியின் எதிர்ப்பையும் மீறி வல்லுறவிற்கு உட்படுத்தியுள்ளார்.

குறித்த சந்தேக நபருடன் சிறுமியை வலுக்கட்டாயமாக அனுப்பி வைத்து விட்டு, வெலம்பொட பொலிஸ் நிலையத்தில் குறித்த இளைஞன் தனது மகளுடன் தலை மறைவாகி விட்டதாக காதலி முறைப்பாடு செய்துள்ளார்.,

சந்தேக நபரின் தொலை பேசி இலக்கத்தை பெற்று பொலிஸ் நிலையத்திற்கு வரவழைக்க முற்பட்ட பொழுதும் அது பலனளிக்காமல் போனதையடுத்து

சந்தேக நபரின் தொலை பேசி எண்ணுடன் தொடர்பு கொண்ட வெலம் பொட பொலிஸ் நிலைய சிறுவர் பிரிவு பொறுப்பதிகாரி இஷாரா,

குறித்த இளைஞனுடன் சில காலமாக காதலிப்பது போல் நடித்து வரக்காபொல பிரதேச ஹோட்டலொன்றிக்கு வர வழைத்து கைது செய்து அவரிடம் மேற்கொண்ட விசாரணையின் பொழுதே மேற்கண்டவற்றை வாக்கு மூலமாக வழங்கியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பாதிக்கப்பட்ட சிறுமி கம்பளை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரி சோதணையில் குறித்த சிறுமி வல்லுறவிற்கு உட்படுத்தப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கம்பளை
ரா.சேகர்

 

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading