Lead NewsLocal

குளியாப்பிட்டியில் மீண்டும் ஊரடங்கு!

குருணாகல் மாவட்டத்தில் பதற்றநிலை ஏற்பட்ட பகுதிகளில் மீண்டும் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது எனப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர அறிவித்துள்ளார்.

இதற்கமைவாக குளியாப்பிட்டி, பிங்கிரிய, தும்மலசூரிய மற்றும் ஹெட்டிபொல ஆகிய பொலிஸ் பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகளில் உடன் அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த பொலிஸ் ஊரடங்குச் சட்டம் நாளை அதிகாலை 4 மணி வரையில் அமுலில் இருக்கும் எனப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

குளியாப்பிட்டிப் பிரதேசத்தில் நேற்று ஏற்பட்ட வன்முறைச் சம்பவத்தால் உடன் அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் இன்று காலை 6 மணி வரை பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில், இன்றும் குறித்த பகுதிகளில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading