Local

தாக்குதலுடன் தொடர்புடைய சகலருக்கும் மரணதண்டனை!

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளினால் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடைய அனைவருக்கும் மரணதண்டனை வழங்கப்பட வேண்டும் என்று அமைச்சர் அஜித் பி பெரேரா வலியுறுத்தியுள்ளார்.

தீவிரவாதிகளுக்கு எதிராக மரணதண்டனை விதிக்கப்பட வேண்டியது அவசியமானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்கொலைக் குண்டுத் தாக்குதலுக்கு உதவியவர்கள், நிதி உதவிகளை வழங்கியவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் மரணதண்டனை விதிக்கப்பட முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதற்குத் தேவையான சட்ட ஏற்பாடுகள் இலங்கை சட்டங்களில் உண்டு எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாகரிகமான சமூகத்திற்கு மரணதண்டனை அவசியமற்றது என்ற போதிலும், இவ்வாறான தீவிரவாதிகளுக்கு எதிராக மரணதண்டனை விதிக்கப்பட வேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading