Local

மேலும் இரண்டு பகுதிகளில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம்!

குருணாகல் மாவட்டத்தின் ரஸ்நாயக்கபுர மற்றும் கொபெய்கனே ஆகிய பொலிஸ் பிரிவுகளுக்கு உடன் அமுலாகும் வகையில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது எனப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர அறிவித்துள்ளார்.

நாளை அதிகாலை 4 மணி வரை ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த பகுதிகளில் ஏற்பட்டுள்ள அமைதியின்மையைக் கட்டுப்படுத்துவதற்காகவே இவ்வாறு பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading