Lead NewsLocal

பதில் பாதுகாப்பு அமைச்சராக ருவன் விஜேவர்தன நியமனம்!

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன, பதில் பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று காலை சீனாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளார். இந்தநிலையில், நாட்டின் அசாதாரண சூழ்நிலைகளைக் கருத்தில்கொண்டு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பதில் பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி நாடு திரும்பும் வரை இந்த நியமனம் அமுலில் காணப்படும் என அரச தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்தால் விடுக்கப்பட்டுள்ள அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் இன ரீதியிலான வன்முறைகள் தலைவிரித்தாடுகின்ற நிலையில், பாதுகாப்பு அமைச்சரான ஜனாதிபதி மைத்திரிபால, பதில் பாதுகாப்பு அமைச்சரை நியமிக்காமல் சீனா பயணமாகியமைக்கு அரசியல் மட்டத்தில் எதிர்ப்பலைகள் கிளம்பியிருந்த நிலையில், பதில் பாதுகாப்பு அமைச்சராக ருவன் விஜேவர்தன நியமிக்கப்பட்டுள்ளார் என்ற தகவலை அரச தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading