Local

பதவி துறந்தார் பாதுகாப்பு செயலாளர்!

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ தனது பதவியை இன்று மாலை இராஜினாமா செய்துள்ளார்.

ஈஸ்டர் திருநாளன்று நாட்டில் இடம்பெற்ற தொடர்குண்டு வெடிப்பு தாக்குதல்கள் தொடர்பில், பாதுகாப்பு செயலாளர் வெளியிட்டிருந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மகாநாயக்க தேரர்களும், பேராயரும்கூட எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர்.

அத்துடன், தீவிரவாத தாக்குதல் குறித்து புலனாய்வுப் பிரிவு முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்ல பதவி துறக்குமாறு ஜனாதிபதியும் நேற்று கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையிலேயே தமது பதவியை பாதுகாப்பு செயலாளர் இராஜினாமா செய்துள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading