Lead NewsLocal

மற்றொரு கறுப்பு ஜூலை ஒருபோதுமே வேண்டாம்! – மஹிந்த கோரிக்கை

எதிரி சக்திகள் நாட்டை மீண்டும் மற்றொரு 1983 கறுப்பு ஜூலைக்குள் தள்ள முயற்சிப்பதாகவும், அதனைத் தடுக்குமாறும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச கோரியுள்ளார்.

தொடரும் வன்முறைகளை அடுத்து அவர் விடுத்துள்ள அறிக்கையில்,

“1983ஆம் ஆண்டு அப்போதைய அரசின் துணையுடன் முன்னெடுக்கப்பட்ட கறுப்பு ஜூலை இனக் கலவரங்கள்தான், நாட்டை 30 ஆண்டு காலப் போருக்குள் தள்ளியது. அந்த அனுபவங்களை நாங்கள் மனதில்கொண்டு செயற்பட வேண்டும்.

அரசு தமது பொறுப்பை நிறைவேற்றாவிடினும், மக்கள், குறிப்பாக, இளைஞர்கள் சட்டத்தை தமது கையில் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.

பொறுமையாகவும் விவேகமாகவும் செயற்பட வேண்டும். மிகவும் கடினமானது என்ற போதும், உங்களின் உணர்வுகளைக் கட்டுப்படுத்த வேண்டும்.

இந்த தீவிரவாதத்தையும், இனவாதத்தையும் தோற்கடிக்க வேண்டும்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading