Sports

இறுதி பந்தில் சென்னை தோல்வி! இரசிகர்களை மகிழ்வித்த டோனி!!

ஞாயிறன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியை பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி தோற்கடித்தது.

சென்னை அணிக்கு இலக்காக 162 ரன்கள் வைக்கப்பட்டது. சென்னை அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 26 ரன்கள் தேவைப்பட்டது

இந்த ஓவரில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியின் கேப்டன் தோனி 24 ரன்களை எடுத்து கடைசி பந்தை தவறவிட்டார். அவர் கடைசி பந்தில் ஒரு ரன் எடுத்திருந்தால் சூப்பர் ஓவரில் வெற்றியாளர் யார் என்பது முடிவு செய்யப்பட்டிருக்கும்.

சென்னை அணி தோல்வியுற்றிருந்தாலும், தோனியின் பேட்டிங் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

சில பழைய நினைவுகளையும் கண் முன் கொண்டு வந்தது என்று கூறலாம்.

கடைசி ஓவரில் பந்து வீசும் வாய்ப்பை உமேஷ் யாதவிடம் கொடுத்தார் விராத் கோலி.

ஆட்டத்தை சிறப்பாக முடிப்பதற்கு பெயர்போன தோனி கடைசி ஓவரில் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

உமேஷ் யாதவ் வீசிய முதல் பந்திலேயே தோனி பவுண்டரி விளாசினார். அதன்பின் அடுத்த பந்தில் தோனி சிக்ஸர் அடிக்க, அது அரங்கத்தை விட்டு வெளியே சென்றது.

முதல் இரண்டு பந்துகளில் பத்து ரன்களை எடுத்திருந்த நிலையில், சென்னை அணி வெற்றியை நோக்கி செல்கிறது என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில் தோனியின் அடுத்த சிக்ஸர் அதை உறுதி செய்யும்படியாக இருந்தது.

அதே சமயம் பெங்களூரு அணியின் கேப்டன் கோலி பதற்றத்தில் இருந்தார். அடுத்த பந்தில் தோனி இரண்டு ரன்களை மட்டுமே எடுத்தார். இது கோலியையும், உமேஷ் யாதவையும் சற்று ஆசுவாசப்படுத்தியது.

எனினும், அதற்கடுத்த பந்தில் தோனி ஒரு சிக்ஸரை விளாசி சென்னை ரசிகர்களை மகிழ்ச்சிப் படுத்தினார்

கடைசி பந்தில் வெற்றிப் பெறுவதற்கு இரண்டு ரன்கள் தேவை என்ற நிலையில், உமேஷ் யாதவ் மெதுவாக பந்து வீசி தோனியை ரன் ஏதும் எடுக்கவிடாமல் தடுத்திவிட்டார்.

 

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading