Local

ஏப்ரல் 3 இல் நாடு முழுதும் போதைஒழிப்பு பரப்புரை! ஜனாதிபதி அதிரடி நடவடிக்கை

ஏப்ரல் மூன்றாம் திகதி காலை 8.30 மணிக்கு  “போதைப்பொருள் பாவனைக்கு எதிராக செயற்படுவோம்” என்று சத்தியப்பிரமானம் செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி செயலகத்தின் பணிப்புரைக்கு அமைய நாடு முழுவதிலும் உள்ள சகல பாடசாலைகளிலும் , அரச காரியாலயங்களிலும், திணைக்களங்களிலும், அமைச்சுக்களிலும் மேற்படி  உறுதிப்பிரமானத்தை செய்யவேண்டும்.

ஜனாதிபதி தலைமையில் இதன் பிரதான வைபவம் சுதந்திர சதுக்கத்தில் இடம்பெறும்.

அதே வேளை கிழக்கு மாகாணத்தில் உள்ள சகல பாடசாலைகளிலும் சகல அரச நிறுவனங்களிலும் காரியாலயங்களிலும் ஜனாதிபதி செயலகத்தினால் அனுப்பப்பட்ட சுற்றுநிருபத்திற்கு அமைவாக உறுதிப்பிரமானம் எடுக்கும்படி கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading